தி.மு.க.,வினருக்கு ஆரத்தி எடுக்கபெண்கள் காத்திருப்பதாக கிண்டல்
ஆத்துார்:அமைச்சர் பொன்முடியை கண்டித்து, அ.தி.மு.க., மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், ஆத்துார், ராணிப்பேட்டையில், நாளை நடக்க உள்ளது. இதுதொடர்பாக ஆத்துாரில் நேற்று, ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசுகையில், ''அமைச்சர்களின் அவதுாறு பேச்சுகளால், முதல்வர் ஸ்டாலின் துாக்கமின்றி உள்ளார். பொன்முடியின் பேச்சுக்கு பின், சட்டசபை தேர்தலுக்கு ஓட்டு கேட்டு செல்லும் தி.மு.க.,வினருக்கு பெண்கள் நல்லமுறையில், 'ஆரத்தி' எடுக்க காத்திருக்கின்றனர்,'' என்றார்.தொடர்ந்து ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், மாவட்ட மகளிர் அணி செயலர் லலிதா பேசினர். கெங்கவல்லி எம்.எல்.ஏ., நல்லதம்பி, முன்னாள் எம்.எல்.ஏ., மனோன்மணி, மாநில அமைப்பு செயலர் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.