உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சவால்களை சந்திக்கும்போது தான் பெண்களுக்கு அதிகாரம் கிடைக்கும்

சவால்களை சந்திக்கும்போது தான் பெண்களுக்கு அதிகாரம் கிடைக்கும்

சேலம்:சேலம், சோனா கல்வி குழுமத்தில் சர்வதேச மகளிர் தின விழா மார்ச் முழுதும் கொண்டாடப்படுகிறது. அதன் கல்லுாரி வளாகத்தில் நடந்த மகளிர் தின விழாவுக்கு, தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்தார். அதில் சேலம் வருமான வரி துறை கூடுதல் கமிஷனர் சவுமியா பேசுகையில், ''சவால்களை சந்திக்கும்போது தான் பெண்களுக்கு அதிகாரம் கிடைக்கும். இதற்கு தன்னம்பிக்கை, தைரியம் மிக அவசியம். பெண்கள், குடும்ப தொழிலை முன்னேற்றுவதிலும், சுயதொழில் தொடங்குவதிலும் அதிக ஆர்வம் காட்ட வேண்டும்,'' என்றார்.கல்லுாரி துணைத்தலைவர் தியாகு பேசுகையில், ''சோனா கல்வி குழுமத்தில் மார்ச் முழுதும் மகளிர் தின மாதமாக, 8 மகளிர் சிறப்பு விருந்தினர்கம் மூலம் கொண்டாடும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பெருமைக்குரியது. அனைத்து மகளிருக்கும் வாழ்த்துகள்,'' என்றார்.சீதா, விசாலாட்சி, சோனா கல்வி குழும முதல்வர்கள் கார்த்திகேயன், செந்தில்குமார், காதர்நவாஷ், கவிதா, பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ