உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாவட்டத்தில் முக்கிய பதவிகளை அலங்கரிக்கும் பெண் அதிகாரிகள்

மாவட்டத்தில் முக்கிய பதவிகளை அலங்கரிக்கும் பெண் அதிகாரிகள்

சேலம்:சேலம் மாவட்ட கலெக்டராக பிருந்தாதேவி, நேற்று பொறுப்பேற்று உடனடியாக பணிகளை தொடங்கினார். ஏற்கனவே, மாவட்ட வருவாய் அலுவலராக மேனகா, கூடுதல் கலெக்டராக (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, சுகாதாரப்பணிகள் இணை இயக்குனராக வளர்மதி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனராக சவுண்டம்மாள், சேலம் மாவட்ட முதன்மை நீதிபதியாக சுமதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் மீராபாய் என, மாவட்டத்தில் அதிகாரமுள்ள முக்கிய பதவிகளில் பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.அதேபோல, சேலம் மாநகர் போலீஸ் கமிஷனராக விஜயகுமாரி, சேலம் டி.ஐ.ஜி.,யாக உமா ஆகியோர் போலீசில் முக்கிய பதவிகளை அலங்கரித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில், பிரதான பதவிகளை பெண்கள் வகிப்பதும்; வழிநடத்துவதும் மகளிர் மத்தியில் உத்வேகத்தையும், இரட்டிப்பு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அதை மெய்ப்பிக்கும் வகையில், பெண்களின் நியாயமான பிரச்னைகளை தீர்த்து, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே, எல்லோருடைய எதிர்பார்ப்பாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை