உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மொபட் மோதி தொழிலாளி பலி

மொபட் மோதி தொழிலாளி பலி

தலைவாசல், அக். 19-தலைவாசல் அருகே, வேப்பம்பூண்டி, ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் கருமலை, 55. கூலித் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் மாலை, 6:30 மணியளவில் வேப்பம்பூண்டி மேடு பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்றுள்ளார்.அப்போது வீரகனுாரில் இருந்து, தலைவாசல் நோக்கி சென்ற 'டிவிஎஸ் - எக்ஸ்.எல்., சூப்பர்' மொபட், நடந்து சென்ற கருமலை மீது மோதியது. படுகாயமடைந்த அவரை, ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் உயிரிழந்தார்.வீரகனுார் போலீசார் விபத்து ஏற்படுத்தியவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ