மேலும் செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்.....
27-Jun-2025
சேலம், உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விழிப்புணர்வு ரதம், ஊர்வலத்தை, கலெக்டர் பிருந்தா தேவி நேற்று, கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ரதத்தை பின் தொடர்ந்தபடி, ஏராளமான செவிலியர்கள், மருத்துவ மாணவ, மாணவியர், மாநகராட்சி அலுவலகம் வழியே ஊர்வலமாக சென்று, மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை அடைந்தனர்.அங்கு நடந்த கருத்தரங்கில், குடும்ப நல துணை இயக்குனர் ராதிகா பேசினார். அப்போது, மக்கள் தொகை அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய தாக்கம், ஆண், பெண் சமம், பெண் கல்வி முக்கியத்துவம், இள வயது திருமணம், கர்ப்பத்தை தவிர்த்தல், பெண் பாலின விகிதத்தை அதிகரித்தல், குடும்ப கட்டுப்பாடு முறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.முன்னதாக, கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் தொகை தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜ்குமார், காசநோய் துணை இயக்குனர் கணபதி, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் தனசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.
27-Jun-2025