உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முதலாம் உலகப்போர் நினைவு தினம் அனுசரிப்பு

முதலாம் உலகப்போர் நினைவு தினம் அனுசரிப்பு

முதலாம் உலகப்போர்நினைவு தினம் அனுசரிப்புசேலம், நவ. 12-சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், முதலாம் உலகப்போர் நினைவு தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது.அதையொட்டி, முதலாவது உலகப்போரில் உயிர் தியாகம் செய்த சேலம் வீரர்களை நினைவுக்கூறும் கல்வெட்டு, இந்திய சுதந்திரத்துக்கு பின் நடந்த போரில், வீரமரணம் அடைந்த சேலம் வீரர்களை போற்றும் கல்வெட்டுடன் கூடிய தனித்தனியே உள்ள இரு நினைவு சின்னங்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியபின், வீரவணக்கம் செலுத்தப்பட்டது. வரலாற்று சங்க பொதுச் செயலர் பர்னபாஸ் தலைமை வகித்தார். முன்னாள் படைவீரர் நல கண்காணிப்பு அலுவலர் அலெக்ஸ், முன்னாள் விமானப்படை அதிகாரி இம்மானுவேல் ஜெயசிங், வரலாற்று சங்க செயல் தலைவர் தாரை குமர வேல், பொருளாளர் ஞானதாஸ், உறுப்பினர் ரூத்ரத்தினம், ஜென்னிஸ் கல்வி மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் வீரர்களின் தியாகம், நினைவு சின்னம் அமைக்கப்பட்டது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை