மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது
சேலம்:சேலம் மாநகர் பகுதிகளில், கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில், அயோத்தியாப்பட்டணம் உட்பட்ட பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். ராமர் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து, சோதனை செய்ததில் அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. அவரது பெயர் குபேந்திரன், 36, என்றும், அயோத்தியாப்பட்டணத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிந்தது. இவர் அப்பகுதியில் உள்ள வாலிபர்கள், பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதயைடுத்து, 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.