உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / லாரி மோதி வாலிபர் பலி

லாரி மோதி வாலிபர் பலி

ஆத்துார், தலைவாசல், சம்பேரியை சேர்ந்தவர் தினேஷ், 24. அதே பகுதியில் பேட்டரி கடையில் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் மதியம், 12:30 மணிக்கு, 'பல்சர்' பைக்கில், ஆத்துார் நோக்கி வந்து கொண்டிருந்தார். அம்மம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே சென்னையில் இருந்து கேரள மாநிலம், பாலக்கோடு நோக்கி சென்ற சரக்கு லாரி, பைக் மீது மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட தினேஷ் படுகாயம் அடைந்தார். அவரை, மக்கள் மீட்டு, மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை