உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இடி தாக்கி 12 ஆடுகள் பலி: ஒருவர் காயம்

இடி தாக்கி 12 ஆடுகள் பலி: ஒருவர் காயம்

மானாமதுரை:மானாமதுரை அருகே உள்ள வின்சென்ட் நகரை சேர்ந்த பாக்கியம் மகன் ஆறுமுகம் 52, இவர் தனது ஆடுகளை பனிக்கனேந்தல் கிராம கண்மாய்க்கு மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் மானாமதுரை பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்த போது இடி தாக்கியதில் ஆறுமுகத்திற்கு சொந்தமான 7 ஆடுகள் பலியானது. காயமுற்ற ஆறுமுகம் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அதேபோன்று இளையான்குடி அருகே மேலத்துறையூர் கோபிராஜன் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றபோது, இடி தாக்கியதில் அவரது 5 ஆடுகள் பலியாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ