உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு 43 மையத்தில் 13,260 பேர் பங்கேற்பு

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு 43 மையத்தில் 13,260 பேர் பங்கேற்பு

சிவகங்கை: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வினை 43 மையங்களில் எழுதவுள்ள 13,260 விண்ணப்பதாரர்கள் காலை 9:00 மணிக்குள் தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:மாவட்ட அளவில் சிவகங்கையில் 22 மையங்களில் 6,360, காரைக்குடியில் 16 மையங்களில் 5,240, தேவகோட்டையில் 5 மையங்களில் 1,660 பேர் என 13,260 பேர் இத்தேர்வினை எழுத உள்ளனர். செப்., 14 அன்று நடக்கும் முதல்நிலை எழுத்து தேர்வில் பங்கேற்போர், காலை 9:00 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் வரவேண்டும். காலை 9:15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்படும்.காலை 9:30 மணிக்கு தேர்வு துவங்கி, மதியம் 12:30 மணி வரை நடைபெறும். தேர்வு அறையை விட்டு மதியம் 12:45 மணிக்கு தான் வெளியே செல்ல வேண்டும். தேர்வு எழுத செல்வோர் தங்களது நுழைவு சீட்டு மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் வர வேண்டும்.தேர்வு அறைக்குள் அலைபேசி, எலக்ட்ரானிக் வாட்ச், புளூடூத் சாதனம், தகவல் தொடர்பு சாதனங்கள், பிற மின்னணு சாதனங்கள் மற்றும் கை பைகள் கண்டிப்பாக எடுத்து செல்லக்கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி