உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை தொகுதிக்கு 2 ஓட்டுப்பதிவு இயந்திரம்: முதலில் கட்சி வேட்பாளர்கள்

சிவகங்கை தொகுதிக்கு 2 ஓட்டுப்பதிவு இயந்திரம்: முதலில் கட்சி வேட்பாளர்கள்

திருப்புத்துார் : சிவகங்கை லோக்சபா தொகுதியில் 20 வேட்பாளர்கள்,ஒரு நோட்டா சின்னம் சேர்த்து 21 சின்னங்கள் என்பதால் இரு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.அங்கீகரிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் சின்னங்கள் முதல் இயந்திரத்தில் முதலிலேயே பதிக்கப்பட்டுள்ளது.சிவகங்கை லோக்சபா தேர்தல் பணியாக தற்போது ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் சின்னங்கள், வேட்பாளர் பெயர் விபரம் பதிக்கப்பட்டு கட்சியினரிடம் இயந்திரங்கள் காண்பிக்கப்பட்டு சீல் வைக்கும் பணி நடந்து வருகிறது. சிவகங்கையில் 20 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஓட்டுப்பதிவிற்கு இரு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. முதல் இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர் சின்னமும், இரண்டாவது இயந்திரத்தில் 4 வேட்பாளர்கள் பெயர்,சின்னத்துடன், ஐந்தாவதாக நோட்டா சின்னம்பதிக்கப்பட்டுள்ளது. முதலாவது இயந்திரத்திலேயே அங்கீகரிக்கப்பட்ட, பதிவு பெற்ற கட்சிகள் வருகின்றன. இதனால் முதலிடத்தில் கை (காங்.,) இரண்டாவதாக இரட்டை இலை (அ.தி.மு.க.), மூன்றாவதாக தாமரை (பா.ஜ.,), நான்காவதாக யானை(பகுஜன் சமாஜ்), ஐந்தாவதாக மைக் (நா.த.) என்று சின்னங்கள் உள்ளன. இதனால் கட்சிகளின் சின்னங்கள் முதல் 5 இடங்களில் வந்து விடுகின்றன. தொடர்ந்து சுயேச்சை சின்னங்கள் வருகின்றன. திருப்புத்துார் சட்டசபைதொகுதியில் 333 ஓட்டுச்சாவடிகளுக்கு கூடுதலாக மாற்றுப்பணிக்காக 67 இயந்திரங்களுடன் 400 இயந்திரங்கள் சின்னங்கள்பொருத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ