உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / துார்வாரப்படாத அதலை கண்மாய் 200 ஏக்கர் பாசன நிலம் பாதிப்பு

துார்வாரப்படாத அதலை கண்மாய் 200 ஏக்கர் பாசன நிலம் பாதிப்பு

காரைக்குடி : காரைக்குடி அதலை கண்மாய் துார்வாரப்படாமல்கருவேல் மரங்கள், ஆகாய தாமரை வளர்ந்து, புதர்மண்டிக்கிடக்கின்றன.இக்கண்மாய் மூலம் 200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த பல ஆண்டாக இக்கண்மாய் துார்வாரப்படாமல் கிடக்கிறது. தற்போதுகண்மாய் முழுவதும் சீமை கருவேல் மரங்கள், ஆகாய தாமரை வளர்ந்து புதர்மண்டிகிடக்கிறது.இதனால், மழை காலங்களில் வரத்து கால்வாய்களில் வரும் மழை நீர் கண்மாய்க்குள் சேகரமாகாமல், விரயமாகிறது. இக்கண்மாயில் நீர் தேங்குவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து காணப்படும். ஆனால், பல ஆண்டாக இக்கண்மாய் துார்வாரப்படாமல் கிடக்கிறது.விவசாயிகளின் நலன் காக்க பொதுப்பணித்துறை நிர்வாகம் இக்கண்மாயை துார்வார வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்