உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குறைதீர் கூட்டத்தில் ரூ.20.24 நலத்திட்ட உதவி  

குறைதீர் கூட்டத்தில் ரூ.20.24 நலத்திட்ட உதவி  

சிவகங்கை: சிவகங்கையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 37 பயனாளிக்கு ரூ.20.24 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவியை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார்.சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பொது குறைதீர் கூட்டம் நடந்தது.கலெக்டர் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்களிடம் 555 மனுக்களை பெற்று துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தனர். மாற்றுத்திறனாளிகள் 11 பேருக்கு ரூ.14.16 லட்சத்தில் நவீன செயற்கை கால், ஆதரவற்ற குழந்தைகள் 26 பேருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் ஒரு ஆண்டிற்கான உதவி தொகை ரூ.6.08 லட்சம் என 37 பயனாளிகளுக்கு ரூ.20.24 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்