உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை வாரச்சந்தையில் தக்காளி 3 கிலோ ரூ.100

மானாமதுரை வாரச்சந்தையில் தக்காளி 3 கிலோ ரூ.100

மானாமதுரை : மானாமதுரை வாரச்சந்தையில் கடந்த சில வாரங்களாக விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட தக்காளி இந்த வாரம் விலை குறைந்து 3 கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டது.மானாமதுரையில் வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும் வாரச்சந்தையில் மதுரை,திருப்புவனம், திருப்பாச்சேத்தி,சிவகங்கை,இளையான்குடி, பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து 400க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பல்வேறு வகையான பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.கடந்த சில வாரங்களாக விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.80லிருந்து ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி இந்த வாரம் மிகவும் விலை குறைந்து 3 கிலோ ரூ. 100க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்ட பட்டர் பீன்ஸ், சோயா பீன்ஸ் இந்த வாரம் ஒரு கிலோரூ. 200க்கும், சின்ன பாகற்காய் ரூ.240க்கும், உருளைக்கிழங்கு ரூ.50க்கும், கத்தரிக்காய் ரூ.60க்கும், பீட்ரூட், கேரட் ரூ.80க்கும், அவரை ரூ.100க்கும், பச்சை மிளகாய் ரூ.80க்கும், பச்சை மொச்சை ரூ. 60 என விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி