உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கார்கள் மோதி விபத்து 5 பேர் காயம்

கார்கள் மோதி விபத்து 5 பேர் காயம்

காரைக்குடி: காரைக்குடியை சேர்ந்தவர் ராஜசேகர் 48. இவர் குடும்பத்தினருடன் சொந்த ஊரான புலியடிதம்பத்திற்கு சென்று விட்டு காரில் காரைக்குடிக்கு திரும்பினார். மானாமதுரையைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் 44. இவர் புதிய கார் வாங்கியதால் குடும்பத்தினருடன் வேளாங்கண்ணி சென்று விட்டு காரைக்குடி வழியாக மானாமதுரைக்கு திரும்பினார்.காரைக்குடி அருகே உள்ள மானகிரி நான்கு சாலை சந்திப்பில் கார் செல்ல முயன்ற போது, இருவரின் காரும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில், ராஜசேகர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள் உட்பட 5 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனந்தராஜ் மற்றும் குடும்பத்தினர் காயம் ஏதுமின்றி தப்பினர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ