உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விதிமீறி செல்லும் வாகனம் காரைக்குடியில் தொடர் விபத்து

விதிமீறி செல்லும் வாகனம் காரைக்குடியில் தொடர் விபத்து

காரைக்குடி: காரைக்குடியில் ஒரு வழிச்சாலையில் வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறி செல்வதால் விபத்து அபாயம் நிலவுகிறது. பயணிகளுக்கான பஸ் ஸ்டாப் பைக் நிறுத்தும் ஸ்டாண்டாக மாறி வருகிறது.காரைக்குடிக்கு சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்துார், ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ்கள் வந்து செல்கின்றன. காரைக்குடி புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலையான வாட்டர் டேங்க், வருமான வரித்துறை அலுவலக பஸ் ஸ்டாப்பில் முறையாக பஸ்கள் நின்று செல்வதில்லை. பஸ் ஸ்டாப்பிற்கு முன்பு ஒரு வழிச்சாலையில் நின்று பயணிகளை இறக்கி செல்கின்றனர். இங்குள்ள பஸ் ஸ்டாப் பைக் நிறுத்தி வைக்கும் பார்க்கிங்காக மாறி வருகிறது. வருமான வரி அலுவலக ஒருவழிச் சாலையில் தடுப்பு இருந்தும் அதனை மீறி வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படுகிறது. போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி