உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கூட்டுறவு வங்கிகளில் ரூ.1912 கோடி கடன் வழங்க இலக்கு 

கூட்டுறவு வங்கிகளில் ரூ.1912 கோடி கடன் வழங்க இலக்கு 

சிவகங்கை: கூட்டுறவு சங்கங்கள் மூலம் 2024- - 2025 ம் ஆண்டில் ரூ.1912 கோடி நகை, பயிர், சுயஉதவிக்குழு, பிற கடன் வழங்க இலக்கு நிர்ணயித்து, ரூ.549.80 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது.கூட்டுறவு துறை மூலம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் மூலம் நகை அடமான கடன், பயிர் கடன், சுய உதவிக்குழுக்களுக்கான கடன், கால்நடை பராமரிப்பு, பிற கடன்கள் வழங்கப்படுகின்றன.சிவகங்கை மாவட்டத்தில் 2024- - 2025 ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக, 1,912.95 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளனர். நகை கடன் ரூ.1,117.50 கோடி, பயிர் கடன் ரூ.200 கோடி, மகளிர் குழு கடன் ரூ.182.25 கோடி, கால்நடை பராமரிப்பு கடன் ரூ.75 கோடி, மற்ற கடன்கள் ரூ.338.20 கோடி என இலக்கு வைத்துள்ளனர்.2024 ஆகஸ்ட் வரை அனைத்து கூட்டுறவு வங்கிகள் மூலம் 50 ஆயிரத்து 170 நபர்களுக்கு ரூ.361.86 கோடி நகை கடன், 4436 விவசாயிகளுக்கு ரூ.45.85 கோடி பயிர் கடன், 598 மகளிர் குழுவிற்கு ரூ.48.82 கோடி கடன், கால்நடை பராமரிப்பிற்கென 4298 பயனாளிகளுக்கு ரூ.28.51 கோடி, பிற கடன்களாக 3119 பேர்களுக்கு ரூ.64.76 கோடி வரை என ஒட்டுமொத்தமாக இது வரை ரூ.549.80 கோடி வரை கடன் வழங்கியுள்ளனர்.

மகளிர் கடன் இலக்கு ரூ.832 கோடி

இம்மாவட்டத்தில் நடப்பு ஆண்டு (2024- - 2025) 10,594 மகளிர் குழுக்களுக்கு ரூ.832 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளனர். ஆகஸ்ட் வரை 5646 மகளிர் குழுக்களுக்கு ரூ.274.10 கோடி வரை வழங்க நிதி ஒதுக்கீடு செய்ததில், 4,985 மகளிர் குழுவினர் ரூ.213.57 கோடி வரை பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி