| ADDED : ஜூலை 29, 2024 10:45 PM
சிவகங்கை : காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தில் தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பு சார்பில் ஆடி கிடைப்பொங்கல் விழா நடைபெற்றது.விழாவிற்கு கூட்டமைப்பு தலைவர் ராஜிவ் காந்தி தலைமை வகித்தார்.குஜராத்தை சேர்ந்த இம்ரான்கான், மகாராஷ்டிரா ரபூல் பங்கேற்றனர். ஆராய்ச்சியாளர் மதிவாணன், அனைத்து விவசாயிகள் சங்க பொது செயலாளர் ஆதிமூலம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகி ஈசன் முருகசாமி, ஆடு வளர்ப்போர் சங்க நிர்வாகி குருந்தலிங்கம், கோயம்புத்துார் குரும்பாடு வளர்ப்போர்சங்க நிர்வாகி சரவணன்,ரமேஷ், தங்கவேல், முருகன், சந்திரன் பங்கேற்றனர். மறவங்கலத்தில் உள்ள ஆட்டு கிடையில் ஆடியை முன்னிட்டு கிடைப்பொங்கல் வைத்து வழிபட்டனர். இக்கூட்டத்தில் வனப்பகுதிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதில் உள்ள உரிமைகள் குறித்து விளக்கினர். மேய்ச்சல் சமூக கையேடு வெளியிட்டனர்.