உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிற்குள் இரவில் வர மறுக்கும் பஸ்களால் விபத்து

மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிற்குள் இரவில் வர மறுக்கும் பஸ்களால் விபத்து

மானாமதுரை : மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிற்குள் இரவில் பஸ்கள் வராமல் செல்வதால் பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் வழியாக மதுரை, திண்டுக்கல்,பழநி, திருப்பூர், கோவை, ஈரோடு, திருச்சி, சென்னை, பரமக்குடி, ராமேஸ்வரம்,அருப்புக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.மதுரை,ராமேஸ்வரம் 4 வழிச்சாலை ரோட்டில்அமைந்துள்ள இந்த பஸ் ஸ்டாண்டிற்கு தினந்தோறும் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்லும் நிலையில் இரவு 7:00 மணிக்கு மேல் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் வராமல் 4 வழிச்சாலை ரோட்டிலேயே பயணிகளை இறக்கி விடுகின்றனர்.பயணிகள் ரோட்டை கடந்து செல்லும்போது விபத்து அபாயம் உள்ளதால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பலமுறை போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. பஸ்கள் உள்ளே வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்