உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரோட்டில் பார்க்கிங் செய்யும் வாகனங்களால் விபத்து

ரோட்டில் பார்க்கிங் செய்யும் வாகனங்களால் விபத்து

சிங்கம்புணரி:சிங்கம்புணரியில் காரைக்குடி -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தவும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது. ஆனால் உழவர் சந்தை, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலேயே கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துகின்றனர். தேசிய நெடுஞ்சாலை என்பதால் வேகமாக வரும் வாகனங்கள் ரோட்டில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மீது மோதி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இச்சாலையில் இதுவரை 5க்கும் மேற்பட்டோர் இறந்தும் பலர் விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில் வாகனங்களை ஒழுங்குபடுத்த போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் விபத்துக்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஓட்டல்கள் முன் ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களை போலீசார் கண்டுகொள்வதில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே நகரில் தொடர் விபத்துகளை தடுக்க ரோட்டில் வாகனங்களை நிறுத்தாதவாறு போலீசார், நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி