உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துார் நுாலகத்தில் தேர்விற்கு கூடுதல் வசதி

திருப்புத்துார் நுாலகத்தில் தேர்விற்கு கூடுதல் வசதி

திருப்புத்துார : திருப்புத்துார் கிளை நுாலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வாசகர்களுக்கு தேவையான கூடுதல் வசதி ஏற்படுத்த பொதுப்பணித்துறையினர் ஆய்வு நடத்தினர்.இந்த நுாலகத்தில் போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் உள்ளன. தற்போது அதை மேம்படுத்தி கூடுதல் வசதி ஏற்படுத்த நுாலகத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஆய்வை பொ.ப.து.(கட்டிடம்) நூலகத்தில் பொறியாளர்கள் மேற்கொண்டனர்.உயர்கல்விக்கு தகுதி தேர்விற்கான புத்தகங்கள், கூடுதல் இருக்கை, கேபின் வசதியுடன் 8 கணினி, மின் விசிறி, கழிப்பறை ஆகிய வசதிகளை ஏற்படுத்த உள்ளனர். முன்புற போர்ட்டிகோவையும் வாசகர் படிக்கும் அறையாக மாற்ற திட்டமிட்டுள்ளனர். விரைவில் அதற்கான பணி துவங்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை