உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை ஊராட்சி ஒன்றிய கூட்டம் ஒத்திவைப்பு

சிவகங்கை ஊராட்சி ஒன்றிய கூட்டம் ஒத்திவைப்பு

சிவகங்கை: சிவகங்கை ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்திற்கு 11 க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் வராததால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.சிவகங்கை ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் நேற்று மதியம் 12:00 மணிக்கு துவங்கியது. தலைவர் மஞ்சுளா பாலசந்தர் (தி.மு.க.,) தலைமை வகித்தார். துணை தலைவர் கேசவன் (அ.தி.மு.க.,) முன்னிலை வகித்தார். பி.டி.ஓ., முனியராஜ், பி.டி.ஓ., (ஊராட்சி) செழியன் பங்கேற்றனர். இந்த ஒன்றியத்தில் தி.மு.க., கூட்டணி 9, அ.தி.மு.க., பா.ஜ., உட்பட 18 கவுன்சிலர்கள் உள்ளனர்.நேற்றைய கூட்டத்திற்கு தலைவர் உட்பட 4 தி.மு.க., கவுன்சிலர்கள், 3 அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மட்டுமே வந்திருந்தனர். கூட்டத்திற்கு போதிய கவுன்சிலர்கள் வந்திருந்ததால், துவக்கலாம் என ஆரம்பித்தனர். ஆனால், துணை தலைவர் கேசவன் (அ.தி.மு.க.,) கவுன்சில் கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் விடுதல் இன்றி வந்தவுடன் கூட்டத்தை துவக்குங்கள் என தெரிவித்தார்.அதற்கு தலைவர், அறுதி பெரும்பான்மையை நிரூபிக்க 6 கவுன்சிலர்கள் வந்திருப்பதால் கூட்டத்தை துவக்கலாம் என கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த துணை தலைவர் அனைத்து கவுன்சிலர்கள் இன்றி கூட்டத்தை துவக்கினால், நான் வெளிநடப்பு செய்வேன் எனக்கூறி அவரும், கவுன்சிலர் அம்சவள்ளி (அ.தி.மு.க.,) இருவரும் வெளிநடப்பு செய்தனர்.இதனால், கவுன்சில் கூட்ட அரங்கில் தலைவர், தி.மு.க., கவுன்சிலர் - 2, அ.தி.மு.க., கவுன்சிலர் 1 மட்டுமே அமர்ந்திருந்தனர். கவுன்சில் கூட்டம் நடத்த அறுதி பெரும்பான்மை இல்லாததால், கவுன்சில் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக பி.டி.ஓ., முனியராஜ் தெரிவித்தார். சிவகங்கை ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் தி.மு.க.,. கவுன்சிலர்கள் பலரும் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாரபட்சமின்றி நிதி ஒதுக்கீடு

ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலசந்தர் கூறியதாவது: கடந்த 5 ஆண்டில் அனைத்து கவுன்சிலர்களுக்கும் பாரபட்சமின்றி நிதி ஒதுக்கி வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளது.நேற்று நடந்த கூட்டத்திற்கு அனைவருக்கும் 5 நாட்களுக்கு முன்பே அழைப்பு விடுத்தோம். அப்படி இருந்தும் கவுன்சிலர்கள் ஏன் பங்கேற்கவில்லை என தெரியவில்லை, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை