| ADDED : மார் 23, 2024 11:53 PM
சிவகங்கை : சிவகங்கையில் அ.தி.மு.க., வேட்பாளர் சேவியர்தாசிற்கு நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.சிவகங்கை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக சேவியர்தாஸ் அறிவித்த பின்னர் சென்னையில் பொதுச் செயலாளர் பழனிசாமியை சந்தித்துவிட்டு நேற்று சேவியர்தாஸ் சிவகங்கை வந்தார். இவருக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கற்பகம், நாகராஜ், நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி, பழனிசாமி, சிவாஜி, கோபி, ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் குழந்தை உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் வரவேற்றனர். வேட்பாளர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் ஆதரவு தரும்படி கேட்டு பிரசாரத்தை துவக்கினார்.