உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண்டதேவி கோவிலில் தேரோட்டம் விமரிசை 18 ஆண்டுகளுக்கு பின் கோலாகலம்

கண்டதேவி கோவிலில் தேரோட்டம் விமரிசை 18 ஆண்டுகளுக்கு பின் கோலாகலம்

தேவகோட்டை:சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம், 18 ஆண்டுகளுக்குப் பின், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்ததால், அப்பகுதியினர் மகிழ்ச்சியடைந்தனர்.இக்கோவிலில் ஆனித் திருவிழா ஜூன் 13ல் கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் மாலை சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் முடிந்து சிறப்பு வாகனங்களில் வீதி உலா நடந்தது.ஐந்தாம் நாள் விழாவையொட்டி சொர்ணமூர்த்தீஸ்வரர் - பெரியநாயகி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. அன்றே இந்தாண்டு தேரோட்டத்திற்காக தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன; புதிய தேருக்கு அலங்கார பணிகள் நடந்தன.விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று, சொர்ணமூர்த்தீஸ்வரர் தேரோட்டம் நடந்தது. சிவகங்கை ராணி மதுராந்தக நாச்சியாருக்கு மரியாதை அளிக்கப்பட்டது. அவர் தேர் வடத்தை தொட்டு வணங்கினார். தொடர்ந்து நாட்டார் மரியாதையை தொடர்ந்து அனைத்து சமூகத்தைச் சேர்ந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.அமைச்சர் பெரியகருப்பன் உள்ளிட்டோர் தரிசனம் செய்தனர். அதிகாலை 6:34 மணிக்கு நிலையிலிருந்து புறப்பட்ட தேர், காலை 8:00 மணிக்கு நிலையை அடைந்தது. ஏராளமானோர் தேரோட்டத்தைக் கண்டு தரிசித்தனர்.

பலத்த பாதுகாப்பு

தேருக்கு முன்னும் பின்னும் நான்கு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, யாரும் உள்ளே நுழைய முடியாத அளவிற்கு, கயிறு மூலம் தடுப்பு அமைக்கப்பட்டது. தென்மண்டல ஐ.ஜி., கண்ணன், ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம், டி.ஐ.ஜி., துரை உட்பட நான்கு டி.ஐ.ஜி.,க்கள், எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் உட்பட, 13 எஸ்.பி.,க்கள், 30 டி.எஸ்.பி.,க்கள், கலெக்டர் ஆஷா அஜித் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ