உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வயல்களில் வேளாண் பயிற்சி

வயல்களில் வேளாண் பயிற்சி

திருப்புத்தூர் : திருப்புத்தூர் ஒன்றியம் செண்பகம்பேட்டையில் நெல் விதை பண்ணையில் காரைக்குடி சேதுபாஸ்கரா வேளாண் கல்லூரி மாணவர்கள் பயிற்சி பெற்றனர்.திருப்புத்தூர் கிராமங்களில் இக்கல்லூரி மாணவர்கள் தங்கி உறைவிடப் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கு வேளாண் அலுவலர்கள் வழிகாட்டுகின்றனர். குதிரைவாலி விதை உற்பத்தி செய்து தரும் செண்பகம்பேட்டை வெள்ளையம்மாளின் வயலை மாணவர்கள் பார்வையிட்டனர். வேளாண் துறை அலுவலர்கள் விதை உற்பத்திக்கு விவசாயிகளுக்கு தரப்படும் சலுகைகள், மதிப்பிடப்படும் விதை அளவு, விதைக்கான தரம் குறித்து விளக்கினர். மாணவர்கள் சந்தோஷ்குமார், விஸ்வ ஹரிஹரன், அசோக், புவனேஸ்வரன், கதிரவன், நரேஷ் தர்ஷன், கார்த்தீஸ்வரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ