உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேவகோட்டையில் அட்சய திருதியை பூஜை

தேவகோட்டையில் அட்சய திருதியை பூஜை

தேவகோட்டை : அட்சய திருதியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.தேவகோட்டை கோதண்டராமர் சுவாமி கோவிலில் அதிகாலையிலேயே கோதண்டராமர் மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து கோதண்டராமரும், சீதையும் மகாலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளினர். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ரங்கநாத பெருமாள் கோவிலில் அதிகாலையில் உதய கருட சேவை நடைபெற்றது.தொடர்ந்து கோ பூஜை, ரங்கநாத பெருமாள், ஸ்ரீ தேவி பூதேவி, மகாலட்சுமி ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. வெளிமுத்தி விலக்கு பட்டுக்குருக்கள் நகரில் அட்சய மகா கணபதிக்கு சிறப்பு ஹோமங்கள் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. சவுபாக்ய துர்க்கை அம்மன் கோவிலில் மக்களுக்கு சவுபாக்யங்கள் கிடைக்க மந்திரங்கள் கூறி சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்