உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவருக்கு பாராட்டு

மாணவருக்கு பாராட்டு

சிவகங்கை : சிவகங்கை கே.ஆர்.தொடக்கப் பள்ளி மாணவர் பவுதின் சிவார்திக். உலக அமைதி, பெண்கள் பாதுகாப்பு, தமிழ் மொழி பண்பாட்டு வளம் பாதுகாப்பு வேண்டியும் உடற்பயிற்சி அவசியத்தை வலியுறுத்தி பிப்.16 முதல் 28 வரை கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை 12 நாள் ஓடியுள்ளார்.மாணவனுக்கு பாராட்டு விழா கே.ஆர்.மேனிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் சரவணன் தலைமையில் நடந்தது. தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஜெயபாரதி, உதவி ஆசிரியர் நிர்மலா, ஜோதி முன்னிலை வகித்தனர். வட்டாரக் கல்வி அலுவலர் ஞானகிரேஸ் வளர்மதி, சோழன் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட் நிமலன் நீலமேகம், அரு.நடேசன் செட்டியார் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பாண்டியராஜன், அலவாக்கோட்டை தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் மைதிலி, சுவாமி விவேகானந்தா தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் வாணி, தமிழாசிரியர் இளங்கோ, ஆசிரியர் முத்துசாமி பேசினர்.* மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளி 2ம் வகுப்பு மாணவர்கள், பிரதீஷ் 7 மற்றும் பிரனீஸ் 7. இரட்டைச் சகோதரர்களான இவர்கள் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை ஓடி சாதனை படைக்க முயற்சி எடுத்தனர். கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து சென்னை வள்ளுவர் கோட்டம் வரை 12 நாட்கள் 707 கி.மீ., ஓடி சோழன் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்தனர். செட்டிநாடு பப்ளிக் பள்ளி தாளாளர் குமரேசன் இவர்களை பாராட்டி பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி