உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்க ஆவணங்கள் தரலாம் காப்பாட்சியர் தகவல்

சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்க ஆவணங்கள் தரலாம் காப்பாட்சியர் தகவல்

சிவகங்கை: சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்க சுதந்திரா போராட்ட கால ஆவணங்களை வழங்குமாறு சிவகங்கை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி தெரிவித்தார்.அவர் கூறியதாவது: சென்னை ஹூமாயூன் மகாலில் 80 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக பொது மக்கள் தங்களிடம் உள்ள சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால ஆவணம், கையெழுத்து பிரதி, செய்திதாள்கள், சிறை வில்லைகள், ராட்டைகள், பட்டயங்கள், ஐ.என்.ஏ., சீருடைகள், தபால் தலைகள் மற்றும் பணத்தாட்கள் போன்றவற்றை நன்கொடையாக வழங்கலாம். தங்கள் வசம் உள்ள அரிய பொருட்களை சென்னை அல்லது சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் நேரடியாக சென்று வழங்கலாம். இவ்வாறு வழங்கப்படும் பொருட்களுக்கு உரிய ஒப்புகை கடிதம், பாராட்டு சான்று சென்னை அரசு அருங்காட்சியக கமிஷனர் மூலம் வழங்கப்படும். இந்த அரிய பொருட்களை காட்சி படுத்தும் போது அதை வழங்கியவர்கள் பெயர் குறிப்பிடப்படும். பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திர போராட்டம் தொடர்பான பொருட்களை அருங்காட்சியகத்திற்கு வழங்கி உதவுங்கள், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி