உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரியக்குடி கோயில் திருவிழா கொடியேற்றுத்துடன் துவக்கம்

அரியக்குடி கோயில் திருவிழா கொடியேற்றுத்துடன் துவக்கம்

காரைக்குடி : அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெறும். இவ்வாண்டு, வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. தினமும் சுவாமி சிம்ம, ஹனுமந்த, யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் 20ம் தேதி திருக்கல்யாணமும், தேரோட்டம் மே 23ம் தேதியும் மே 26 தெப்பமும் மே 27 புஷ்ப பல்லக்கும், நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் சீனிவாசன், செயல் அலுவலர் விநாயகவேல் செய்து வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ