மேலும் செய்திகள்
கலைத் திருவிழா இன்று துவக்கம்
22-Aug-2024
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டி துவங்குகிறது.முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டி இன்று துவங்குகிறது. 1341 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 121 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வளப்படுத்துதல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் போட்டிகள் நடத்தப்படுகின்றன. செப்.10 வரை நடைபெறுகிறது.ஒருவர் 3 தனிப்போட்டி, மற்றும் இரண்டு குழுப் போட்டிகளில் மட்டுமே பங்குபெற முடியும்.பள்ளி அளவில் நடைபெறும் ஒவ்வொரு போட்டியிலும் முதல் இடத்தில் வெற்றி பெறும் தனிநபர்/குழு மட்டுமே வட்டார அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெறமுடியும்.வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளிலும் அதனைத் தொடர்ந்து மாநில அளவிலான போட்டிகளிலும் கலந்துகொள்ள முடியும் என்றார்.
22-Aug-2024