மேலும் செய்திகள்
அழகப்பா பல்கலையில் பார்வையாளர் தினம்
01-Mar-2025
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலையில் நடந்த சித்திரச் சந்தை ஓவிய கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டு ஓவியங்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.தமிழகத்திலேயே முதன்முறையாக அழகப்பா பல்கலை. நுண்கலைத்துறை சார்பில், அழகப்பர் அருங்காட்சியகம் அருகே சித்திரச் சந்தை நடந்தது. அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி சித்திரச் சந்தையை தொடங்கி வைத்தார். நுண்கலை துறைத்தலைவர் செந்தமிழ்பாவை வரவேற்றார். பதிவாளர் செந்தில் ராஜன், ஆட்சி குழு உறுப்பினர் சேகர், பழனிச்சாமி, ராஜாராம், ஜெயகாந்தன் தேர்வாணையர் ஜோதிபாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதில் அழகப்பா பல்கலை நுண்கலைத் துறை மாணவ, மாணவிகள் வரைந்த ஆயிரக்கணக்கான ஓவியங்கள் 50 ஸ்டால்கள் மூலம் காட்சிக்கு வைக்கப்பட்டன. அக்ரலிக் பெயின்டிங், ஆயில் பெயின்டிங், வாட்டர் கலர், க்ரையான், பென்சில், நுால் மூலம் வரையப்பட்ட ஓவியங்கள் மற்றும் பல வகை சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ரூ.100 முதல் ரூ. 20 ஆயிரம் வரை ஓவியங்கள் விற்பனை செய்யப்பட்டது.
01-Mar-2025