| ADDED : ஜூன் 18, 2024 07:07 AM
சிவகங்கை : பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட மசூதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.சிவகங்கை ஈத்கா மைதானத்தில் அனைத்து பள்ளிவாசலை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து சிறப்பு தொழுகை, பிரார்த்தனை செய்தனர். நேற்று காலை 6:45 மணிக்கு துவங்கிய சிறப்பு தொழுகை காலை 8:00 மணி வரை நடைபெற்றது.நபி இப்ராகிம் தியாகத்தை போற்றும் விதமாக ஆடுகளை பலியிட்டு ஏழைகளுக்கு பங்கிட்டு வழங்கினர்.சிவகங்கை இன்ஸ்பெக்டர் லிங்கபாண்டியன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிறப்பு தொழுகையில் வாலாஜா நவாப் ஜூம்மா பள்ளிவாசல் தலைமை இமாம் மவுலானா முகம்மது பிலால் தாவூதி, இந்திரா நகர் ஹவ்வா பள்ளிவாசல் இமாம் மவுலானா மன்சூர் ஹூசைன் காசிபி, ஆதம் பள்ளிவாசல் இமாம் மவுலானா சுல்தான் ைஹரி சிறப்பு பிரார்த்தனையை நடத்தினர். வாலாஜா நவாப் ஜூம்மா பள்ளி வாசல் தலைவர் காஜா முகைதீன் தலைமை வகித்தார்.காரைக்குடி: வ.உ.சி., ரோடு ஈத்கா மைதானத்தில் ஐக்கிய முஸ்லிம் ஜமாத் கமிட்டி சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது. இமாம் அபுபெக்கர் சித்திக் தலைமை வகித்தார். ஜமாத் தலைவர் அப்துல் ரகுமான், செயலாளர் அலி மஸ்தான், பொருளாளர் சாதிக் அலி பங்கேற்றனர்.காரைக்குடி, காட்டுத்தலைவாசல் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடந்தது. பாண்டியன் திரையரங்க திடலில் ஏகத்துவ முஸ்லீம் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது.திருப்புத்துார்: அச்சுக்கட்டு தெரு ஈத்கா மைதானத்தில் நேற்று காலை 6:45 மணிக்கு அனைத்து பள்ளி வாசல் ஜமாத்தார், முஸ்லிம்கள் பெரிய பள்ளி வாசலில் இருந்து ஊர்வலமாக ஈத்கா மைதானம் வந்தனர். அங்கு சிறப்பு தொழுகை நடத்தினர். பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் முகமது பாரூம் ஆலிம் தலைமை வகித்தார். தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடந்த தொழுகையில் பெண்கள் பங்கேற்றனர்.