உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பூமாயி அம்மன் கோயில் ரத ஊர்வலம்

பூமாயி அம்மன் கோயில் ரத ஊர்வலம்

திருப்புத்துார்: திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு நடந்த அம்மன் ரத ஊர்வலத்தில் பக்தர்கள் வடம் பிடித்தனர். பூமாயி அம்மன் கோயில் வசந்தப் பெருவிழா ஏப்.29ல் கொடியேற்றத்துடன்துவங்கியது. தினசரி இரவில் அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி, பல்வேறு வாகனங்களில் திருக்குளத்தை வலம் வந்தார். ஐந்தாம் நாளன்று பால்குடமும், ஏழாம் நாளில் பொங்கல் விழாவும் நடந்தது. ஒன்பதாம் நாளை முன்னிட்டு அம்மனுக்கு ரத ஊர்வலம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. பின் உற்ஸவருக்கும் பல்வேறு தீபாரதனை நடந்து அம்மன் தேரில் எழுந்தருளினார். பின்னர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் ரதம், மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்களால் வடம் பிடிக்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. தெருக்களில் அம்மனுக்கு அர்ச்சனை செய்து பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை