உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பூமாயி அம்மன் கோயில் தெப்பம்

பூமாயி அம்மன் கோயில் தெப்பம்

வசந்தப் பெருவிழா நிறைவுதிருப்புத்துார்: திருப்புத்துார் பூமாயிஅம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழா நிறைவாக தெப்பத்தில் அம்மன் எழுந்தருளி குளத்தில் வலம் வந்தார்.பூமாயி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழாவை அடுத்து வசந்தப்பெருவிழா நடந்து வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழா ஏப்.29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி இரவில் உற்ஸவ அம்மன் கோயில் குளத்தை பவனி வந்தார். இரண்டாம் நாளில் அம்மன் ஊஞ்சல் உற்ஸவம் நடந்தது. தொடர்ந்து, மே3 ல் பால்குடம், மே5ல் பொங்கல்விழா, மே7ல் அம்மன் ரத ஊர்வலமும் நடந்தது.பத்தாம் நாள் காலையில் கோயில் குளத்தில் தீர்த்தவாரியும், தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டும் நடந்தது. பின்னர் இரவில் விநாயகர், பரிவார தெய்வங்கள், மூலவருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, உற்ஸவ அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. பின்னர் தெப்பத்தில் எழுந்தருளி குளத்தில் வலம் வந்தார். பக்தர்கள் குளத்தைச் சுற்றி நின்று தெப்பத்தில் எழுந்தருளி அம்மனை வழிபட்டனர். அம்மன் திருவீதி உலா வந்து கோயில் எழுந்தருளினார். ஏற்பாட்டினை வசந்தப் பெருவிழாக்குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ