பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை
சிவகங்கை : சிவகங்கையில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. நகர் தலைவர் உதயா தலைமை வகித்தார். ஓ.பி.சி., அணி மாநில செயற்குழு உறுப்பினர் நாகேஸ்வரன் முன்னிலை வகித்தார்.நகர் பொது செயலாளர்கள் பாலா, சதீஸ் கலந்து கொண்டனர். காளையார் கோவில் வடக்கு ஒன்றியம் சார்பில் நடந்த முகாமில் ஒன்றிய தலைவர் பில்லப்பன், மாநில உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு தலைவர் சோழன் பழனிசாமி, மாவட்ட பொதுச் செயலாளர் மார்த்தாண்டன், மாநில வர்த்தக பிரிவு செயலாளர் ராஜா கலந்து கொண்டனர்.