உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போக்சோவில் சிறுவன் கைது

போக்சோவில் சிறுவன் கைது

சிவகங்கை : சிவகங்கையில் போக்சோ வழக்கில் 9ம் வகுப்பு படிக்கும் சிறுவன் கைது செய்யப்பட்டார்.சிவகங்கை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சிறுமி. இவர் சிவகங்கையில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறார். சிறுமியின் தாய் தந்தை பிரிந்து வாழ்கின்றனர். சிறுமி தாய் பாதுகாப்பில் இருக்கிறார்.சிறுமியின் வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டிற்கு விடுமுறைக்கு 9ம் வகுப்பு படிக்கும் சிறுவன் வந்தார். இவர் பெற்றோர் இல்லாத நேரம் பார்த்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். சிறுமியின் தாயார் கொடுத்த புகாரில் சிவகங்கை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து 9ம் வகுப்பு படிக்கும் சிறுவனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ