புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்
இளையான்குடி,: இளையான்குடி ஒன்றியத்துக்குட்பட்ட சுந்தனேந்தல் கிராமத்தில் இருந்து பரமக்குடிக்கு அரசு பஸ் இயக்க வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். எம்.எல்.ஏ., தமிழரசி நேற்று அந்த வழித்தடத்தில் அரசு பஸ் சேவையை துவக்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன், காரைக்குடி மண்டல தொ.மு.ச.,பொதுச் செயலாளர் பச்சைமால், மண்டல துணை மேலாளர் தொழில்நுட்ப பிரிவு தமிழ்மாறன், இளையான்குடி தாசில்தார் முருகன், இன்ஸ்பெக்டர் மணிகண்டன்,பரமக்குடி போக்குவரத்து கழக கிளை மேலாளர் ரத்தினவேல், முன்னாள் ஊராட்சி தலைவர் அமுதா, நிர்வாகிகள் கண்ணன், சாரதி, சிவனேசன் கலந்து கொண்டனர்.