உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பாமாயில், பருப்பு கிடைக்காத கார்டுதாரர்கள் ஜூனிலும் பெறலாம்

பாமாயில், பருப்பு கிடைக்காத கார்டுதாரர்கள் ஜூனிலும் பெறலாம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ரேஷன் கடைகளில் மே மாதத்திற்கான பாமாயில், துவரம்பருப்பு பெறாதவர்கள் ஜூன் முதல் வாரம் வரை மே மாத ஒதுக்கீட்டை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இங்குள்ள 829 ரேஷன் கடைகள் மூலம், மாதந்தோறும் 3.66 லட்சம் கார்டுகளுக்கு இலவச அரிசி, மானியத்தில் துவரம்பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் வினியோகம் செய்யப்படுகிறது.மானியத்தில் துவரம் பருப்பு கிலோ ரூ.30, பாமாயில் (1 கிலோ) பாக்கெட் ரூ.25 க்கு விற்கப்படுகிறது. ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் ரேஷனில் துவரம் பருப்பு, பாமாயில் வாங்குகின்றனர்.

மே மாத ஒதுக்கீடில்லை

தேர்தல் நடத்தை விதி காரணமாக, மே மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் வினியோகத்திற்கான டெண்டர் விட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 3.66 லட்சம் கார்டுகளுக்கு வழங்க 3.76 லட்சம் பாக்கெட் பாமாயில், 384 டன் துவரம்பருப்பு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யவில்லை. தற்போது மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்து, நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் ரேஷன் கடைகளுக்கு படிப்படியாக வழங்கி வருகின்றனர்.இம்மாவட்டத்திற்கு மே மாத ஒதுக்கீடான 274 டன் பருப்பு, 3.75 லட்சம் பாக்கெட் பாமாயில் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கார்டுதாரர்கள் மே மாதத்திற்கான பொருளை பெறாவிடில், ஜூன் முதல் வாரத்திற்குள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி