| ADDED : ஆக 08, 2024 04:47 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே ந.வைரவன்பட்டியில் வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயிலில் பிரமோத்ஸவத்தை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில் பக்தர்கள் உற்சாகமாக வடம் பிடித்தனர். நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் கோயிலான இங்கு வயிரவருக்கு ஆடி பிரமோத்ஸவம் 11 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஜூலை 30ல் கொடியேற்றி காப்புக்கட்டி உற்ஸவம் துவங்கியது. தொடர்ந்து தினசரி காலையில் வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடும், இரவில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. நேற்று 9ம் நாளை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு உற்ஸவர் வயிரவர் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் வயிரவருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 4:40 மணிக்கு தேருக்கு தீபாராதனை நடந்து வடம் பிடித்து தேரோட்டம் துவங்கியது.நாளை காலை 9:00 மணிக்கு மேல் தீர்த்தவாரி, வெள்ளி ரத புறப்பாடு நடைபெறும். இரவில் பூப்பல்லக்கில் சுவாமிதிருவீதி உலா நடைபெறும். ஆக. 9 காலை 9:15 மணிக்கு பஞ்சமூர்த்திகள்,வயிரவருக்கு மகா அபிேஷகம் நடைபெறும். இரவு 6:00 மணிக்கு திருக்கல்யாணமும், பின்னர் பஞ்ச மூர்த்திகள், வயிரவர் திருவீதி உலாவுடன் விழா நிறைவடையும்.