உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளையான்குடிக்கு முதல்வர் விருது

இளையான்குடிக்கு முதல்வர் விருது

இளையான்குடி : சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட இளையான்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு முதல்வர் விருது வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் முதல்வர் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2022--2023க்கான ஆண்டில் போலீசாரின் வருகை பதிவு, குற்றவாளிகளை விரைந்து கைது செய்வது, புகார்தாரர்களை நடத்திய விதம், ஸ்டேஷன் வளாகத்தை துாய்மையாக வைத்திருந்தால், கோர்ட்டில் வழக்குகளை விரைவாக முடித்தல் போன்ற காரணங்களுக்காக இளையான்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு முதல்வர் விருதை சென்னையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ், டி.ஜி.பி.,சங்கர் ஜிவாலிடம் பெற்றுக் கொண்டார். இதையடுத்து மாவட்ட எஸ்.பி.,டோங்கரே பிரவீன்உமேஷ் இளையான்குடி போலீசாரை பாராட்டி பரிசுகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி