உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வெயிலால் மிளகாய் விளைச்சல் பாதிப்பு

வெயிலால் மிளகாய் விளைச்சல் பாதிப்பு

எஸ்.புதுார் : கொளுத்தும் வெயிலால் எஸ்.புதுாரில் மிளகாய் விளைச்சல் பாதித்து சாகுபடி முன்கூட்டியே முடிவுக்கு வந்துள்ளது.இவ்வொன்றியத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சம்பா மற்றும் குண்டு மிளகாய் சாகுபடி செய்துள்ளனர்.அறுவடை காலத்தில் மிளகாய் விலை ஏற்றும் இறக்கமாக இருந்ததால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர்.இந்நிலையில் பூச்சி தாக்குதல் ஒரு பக்கம், வாட்டும் வெயில் இன்னொரு பக்கம் என மிளகாய் சாகுபடி பாதித்து விளைச்சல் முன் கூட்டியே முடிவுக்கு வரத்தொடங்கியுள்ளது. கடைசி காய்ப்பை பலர் பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர்.பழனிச்சாமி, விவசாயி: 50 சென்ட் நிலத்தில் குண்டு சம்பா சாகுபடி செய்திருந்தேன். முதல் எடுப்பில் 60 ரூபாய் வரை விலை போனது. அதற்குப் பிறகு விலை ஏற்ற இறக்கமாக சென்றது. வெயிலால் விளைச்சல் பாதித்துள்ளது. கடைசி காய்களை பழத்துக்காக செடியிலேயே பழுக்க விட்டுவிட்டோம். இந்த முறை மிளகாய் பயிரிட்டவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை