| ADDED : மே 28, 2024 04:08 AM
சிவகங்கை : அரசனுார் ஊராட்சி ஏ.ஆர்., உசிலம்பட்டியில்ரோட்டில் வளர்ந்துள்ளமுட்செடிகளை அகற்றவும், குளியல் தொட்டி கட்டித்தர கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், அரசனுார் ஊராட்சி, ஏ.ஆர்., உசிலம்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த காலனிக்கு செல்லும்ரோட்டில் முட்புதர்கள் வளர்ந்து, விஷப்பூச்சிகளின் அச்சம் இருப்பதால், அவற்றை உடனே அகற்றித்தர வேண்டும். மேலும், காலனி மக்களுக்கு குளியல் தொட்டி கட்டித்தர வேண்டும் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி காலனி மக்கள் மற்றும் மகளிர் குழுவினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.அரசனுார் ஊராட்சி தலைவர் செல்வராணி கூறியதாவது: ஆதிதிராவிடர் காலனி மக்கள் குடியிருக்கும் பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைத்து தரப்படும். தேர்தல் நடத்தை விதியால், வேலை உறுதி திட்ட பணியாளர்களை வைத்து வேலை செய்ய முடியவில்லை. நடத்தை விதி தளர்வுக்கு பின், கருவேல் மரங்கள் அகற்றப்படும். படிப்படியாக காலனி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரப்படும்.