மேலும் செய்திகள்
சிவகங்கையில் இன்று கலைத் திருவிழா போட்டி
29-Aug-2024
காரைக்குடி : பள்ளி அளவிலான கலை திருவிழா போட்டிகளை பதிவேற்றம் செய்வதில் தலைமை ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. கலைத்திருவிழாவில் நடனம், ஓவியம், கதை கூறுதல், மாறுவேடம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுகிறது. வட்டார வள மையத்தில் நேரடியாக நடந்த இப்போட்டிகள் கடந்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடந்தது. இவ்வாண்டு இப்போட்டிகள் செப்.2 முதல் செப்.,12 வரை வட்டார வள மையத்தில் நேரடியாக நடைபெறும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. பிறகு ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளில், முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், போட்டோ பதிவேற்றம் செய்தால் மட்டும் போதும் என்று அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே வீடியோ பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குழப்பமான உத்தரவால் தலைமை ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். காலாண்டு தேர்வு நெருங்கி வரும் வேளையில் இதுபோன்று கலைத் திருவிழாவால் மாணவர்களின் கல்வி தரமும் குறைய வாய்ப்புள்ளதாக பெற்றோர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
29-Aug-2024