உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பட்டியலுடன் காங்., வேட்பாளர் பிரசாரம் 

பட்டியலுடன் காங்., வேட்பாளர் பிரசாரம் 

சிவகங்கை : சிவகங்கையில் காங்., வேட்பாளர் கார்த்தி எம்.பி., கடந்த 5 ஆண்டில் ஒதுக்கிய நிதி, செய்த பணிகள் குறித்த விபர பட்டியலை வெளியிட்டு 'இண்டியா' கூட்டணியினர் ஓட்டு சேகரித்து வருகின்றனர். இண்டியா கூட்டணியில் சிவகங்கை தொகுதி காங்.,க்கு ஒதுக்கப்பட்டு, வேட்பாளராக மூன்றாவதுமுறையாக கார்த்தி எம்.பி., போட்டியிடுகிறார்.கார்த்தி எம்.பி.,க்காக அவரது தந்தை முன்னாள் அமைச்சர் சிதம்பரம், மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி கட்சியில் அங்கம் வைக்கும் கட்சிகள்அனைத்தும், காங்., வேட்பாளருக்கு ஓட்டளிக்க பிரசாரம் செய்து வருகின்றனர். காங்., வேட்பாளர் செல்லும் இடங்களில் பெண்கள், எம்.பி.,யாக தேர்வாகி என்ன செய்தீர்கள் என்ற கேள்விகளை கேட்கின்றனர்.கடந்த 5 ஆண்டில் (2019-2024 வரை) எம்.பி., தொகுதி நிதியில் சிமென்ட் ரோடு, ஆழ்குழாய் கிணறு, ைஹமாஸ் விளக்கு, சத்துணவு கூடம் உட்பட ஏராளமான பணிகளை செய்துள்ளதாக, நோட்டீஸ் வினியோகம் செய்து வருகின்றனர். பிரசாரத்திற்கு செல்லும் வேட்பாளர் கார்த்தியுடன் செல்லும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அந்தந்த சட்டசபை தொகுதிகளில் செய்யப்பட்ட பணிகள் விபரம், அதற்கான நிதி உள்ளிட்ட பட்டியலுடன் நோட்டீஸ் வினியோகித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ