உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இரட்டை கொலைக்கு இன்ஸ்டாகிராமில் சதி

இரட்டை கொலைக்கு இன்ஸ்டாகிராமில் சதி

சிவகங்கை: சிவகங்கை அருகே கொல்லங்குடியில் நடந்த அண்ணன், தம்பி கொலையில் மதுமதி என்ற பெண் பயன்படுத்திய அலைபேசி மூலம் இன்ஸ்டாகிராமில் சதி திட்டம் தீட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா நாச்சிகுளம் சரவணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி மகன்கள் ஜெயசூர்யா 24, சுபாஷ் 23. இருவர் மீதும் கொலை வழக்கு உள்ளது. கொல்லங்குடி அருகே கல்லணையில் தங்கி மஞ்சுவிரட்டு மாடு வளர்த்தனர். பனங்குடி மஞ்சுவிரட்டில் புதுப்பட்டியை சேர்ந்த சக்தி மகன் மதன் 20 மற்றும் நண்பர்களுடன் தகராறு ஏற்பட்டது.கடந்த ஞாயிறன்று இரவு 10:30 மணிக்கு மதன் மற்றும் அவரது நண்பர்கள் கல்லணை பகுதியில் ஜெயசூர்யா, சுபாஷை கொலை செய்தனர்.கொலை தொடர்பாக காளையார்கோவில் போலீசார் நேற்று முன்தினம் சிவகங்கை மதுமதி 26, திவாகர் 23, சுந்தரநடப்பு சந்தோஷ் 23, நகரம்பட்டி ராம்ஜி 21, யுவராஜ் 22, ஒக்கூர் அபினேஷ் 22, மதகுபட்டி அருண்குமார் 30 ஆகியோரை கைது செய்தனர்.இந்த கொலையில் தொடர்புடைய மதன், முத்துபாண்டி உள்ளிட்டோர் மதுமதியின் அலைபேசி மூலமாக இன்ஸ்டாகிராமில் மற்ற நண்பர்களுடன் கொலைக்கான சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள மதன், முத்துபாண்டி உள்ளிட்ட 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை