உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை மாவட்டத்தில் 11 புதிய சுகாதார நிலைய கட்டடம்

சிவகங்கை மாவட்டத்தில் 11 புதிய சுகாதார நிலைய கட்டடம்

காரைக்குடி : சிவகங்கை மாவட்டத்தில் ரூ.5.65 கோடி மதிப்பீட்டில் 11 புதிய சுகாதார நிலைய கட்டடங்களை அமைச்சர் திறந்து வைத்தார்.காரைக்குடி செஞ்சையில் புதிதாக கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தனர்.சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, முத்துப்பட்டினம், செஞ்சை, புதுவயல், கீழப்பூங்குடி, தேவகோட்டை முத்தனேந்தல், சிவகங்கை, புளியால், மணலுார், மாரநாடு, அ.நெடுங்குளம் பகுதியில் 4 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், 4 துணை சுகாதார நிலையம், 3 வட்டார பொது சுகாதார நிலையம் உட்பட ரூ.5.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 11 புதிய கட்டடங்களை அமைச்சர் திறந்து வைத்தார்.பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் செல்வ விநாயகம் கலந்து கொண்டார். கலெக்டர் ஆஷா அஜித் தலைமையேற்றார். மாவட்ட சுகாதார அலுவலர் விஜய் சந்திரன் வரவேற்றார். எம்.எல்.ஏ.,க்கள் மாங்குடி, தமிழரசி, சேர்மன் முத்துத்துரை வாழ்த்தினர். நகர் நல அலுவலர் திவ்யா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை