உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நெடுஞ்சாலையில் கொட்டப்பட்ட கட்டட கழிவு

நெடுஞ்சாலையில் கொட்டப்பட்ட கட்டட கழிவு

காரைக்குடி: காரைக்குடியில் திருச்சி -ராமேஸ்வரம் நெடுஞ்சாலை செல்கிறது.கோவிலுார் மற்றும் ஓ.சிறுவயல் நான்கு வழிச் சாலை சந்திப்பில் நெடுஞ்சாலையோரம் குப்பை கொட்டுவது தொடர்கிறது. கோழி கழிவு, கட்டட கழிவு, பிளாஸ்டிக் குப்பை என தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. தவிர குப்பைகளில் தீ வைப்பதால் அப்பகுதி புகை மூட்டமாகவும் காணப்படுகிறது. இரவு நேரங்களில் கட்டட கழிவுகளை கொண்டு வந்து நெடுஞ்சாலையில் கொட்டி செல்கின்றனர். மலை போல் குவிந்து கிடக்கும் கழிவுகளால் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ