உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் கட்டுமான பணி மரங்களை பாதுகாக்க நடவடிக்கை

திருப்புவனத்தில் கட்டுமான பணி மரங்களை பாதுகாக்க நடவடிக்கை

திருப்புவனம்: திருப்புவனம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டட கட்டுமான பணிக்கு இடையூறாக இருந்த மரங்கள் அப்படியே பெயர்த்து எடுத்து வேறு இடத்தில் நடும் பணி தொடங்கியுள்ளது.திருப்புவனம் அரசு மருத்துவமனையில் அவசர கால மகப்பேறு குழந்தை பராமரிப்பு பணிக்காக கூடுதலாக கட்டடம் கட்ட கடந்த மார்ச் 16ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. மருத்துவமனை வளாகம் முழுவதும் பழமை வாய்ந்த 10க்கும் மேற்பட்ட வேம்பு மரங்கள் உள்ளன. இவற்றை அகற்றி தான் கட்டுமான பணி மேற்கொள்ள முடியும், மரங்களை அகற்றி வேறு இடத்தில் அப்படியே நட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கடந்த இருநாட்களாக ஏழு வேம்பு மரங்களின் கிளைகள் கவாத்து செய்யப்பட்டு சணல் சாக்குப்பைகளால் மூடி வைக்கப்பட்டுள்ளது. மரங்களின் வேர்ப்பகுதியைச் சுற்றிலும் மூன்று அடி துாரத்திற்கு மணலுடன் அப்படியே மரங்களை பெயர்த்து எடுக்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் ஏழு மரங்களும் மருத்துவமனை வளாகத்தில் நட்டு பராமரிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை