உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாங்குளம் ஊராட்சியில் கருத்து கேட்பு கூட்டம்

மாங்குளம் ஊராட்சியில் கருத்து கேட்பு கூட்டம்

மானாமதுரை, : மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மாங்குளம் ஊராட்சியில் முறைகேடு நடந்தது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வார்டு உறுப்பினர்களிடம் கருத்துக்களை கேட்டு அனுப்புமாறு மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணக்குமாருக்கு உத்தரவிட்டிருந்தார்.இதனைத் தொடர்ந்து நேற்று மாங்குளம் ஊராட்சியில் கலந்து கொண்ட 6 ஊராட்சி உறுப்பினர்களிடம் மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார், துணைத் தாசில்தார் சரவணன், பி.டி.ஓ.,மாலதி, மண்டலவட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி ஆகியோர் விசாரணை நடத்தினர்.தாசில்தார் கிருஷ்ணக்குமார் கூறியதாவது:கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட வார்டு உறுப்பினர்களிடம் கருத்துக்களை கேட்டு அதனை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிவைக்க உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை