மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
4 hour(s) ago
பயிற்சி முகாம்
4 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
4 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
4 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
4 hour(s) ago
சிவகங்கை : சிவகங்கை கலெக்டர்அலுவலகம் எதிரே அ.தி.மு.க., சார்பில் தமிழக அரசை கண்டித்தும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர்செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உமாதேவன், குணசேகரன், நாகராஜன், கற்பகம், நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் கோபி, சேவியர் தாஸ், கருணாகரன், அருள் ஸ்டீபன், பழனிச்சாமி, சிவாஜி, மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணை தலைவர் வழக்கறிஞர் ராஜா, மணிமாறன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் குழந்தை கலந்து கொண்டனர்.எம்.எல்.ஏ., செந்தில்நாதன் பேசுகையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விஷயத்தில் தமிழக அரசு மெத்தனமாக இருந்துள்ளது. முதல் நாள் 4 பேர் இறந்த போது கலெக்டர் முறையாக அறிக்கை தெரிவித்து இருந்தால் இவ்வளவு பெரிய இறப்பு தவிர்க்கப்பட்டிருக்கும். இதற்கு தமிழக அரசு தான் பொறுப்பு ஏற்கவேண்டும். கள்ளச்சாராய விஷயத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலியாக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். தமிழகத்தில் கள்ளச்சாராயம், போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago